/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி சித்திரை திருவிழா ரூ.40.48 லட்சம் காணிக்கை
/
வீரபாண்டி சித்திரை திருவிழா ரூ.40.48 லட்சம் காணிக்கை
வீரபாண்டி சித்திரை திருவிழா ரூ.40.48 லட்சம் காணிக்கை
வீரபாண்டி சித்திரை திருவிழா ரூ.40.48 லட்சம் காணிக்கை
ADDED : ஜூன் 07, 2025 12:54 AM
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ரூபாய் 40.48 லட்சம் உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 6 முதல் 13 வரை விமரிசையாக நடந்தது. 16 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கோயில் உண்டியல்கள் நிரந்தரமாக 12 இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில் திறந்து எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு துவங்கியது. கோயில் செயல் அலுவலர் நாராயணி, அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியன், எழுத்தர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிநிலையத்துறை ஊழியர்கள், விரபாண்டி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர்கள்,மாணவிகள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணும் பணி இரவு 8:45 மணிக்கு நிறைவு பெற்றது. உண்டியலில் ரூ.40 லட்சத்து 48 ஆயிரத்து 383 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 30 கிராம் தங்கம், 702 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்தது. இதனை கோயில் வங்கிக்கணக்கில் டிபாசிட்' செய்யப்பட்டது.