/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி சித்திரை திருவிழா உண்டியலில் ரூ.11.15 லட்சம்
/
வீரபாண்டி சித்திரை திருவிழா உண்டியலில் ரூ.11.15 லட்சம்
வீரபாண்டி சித்திரை திருவிழா உண்டியலில் ரூ.11.15 லட்சம்
வீரபாண்டி சித்திரை திருவிழா உண்டியலில் ரூ.11.15 லட்சம்
ADDED : மே 27, 2025 01:32 AM

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா தற்காலிக உண்டியல்களில் காணிக்கையாக ரூ.11.15 லட்சம் வசூல் ஆனது..
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடந்தது. திருவிழாவிற்காக 22 இடங்களில் தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்த உண்டியல்களின் இருந்த காணிக்கை எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தார். காணிக்கை எண்ணும் பணியில் சவுராஸ்டிரா கல்லுாரி மாணவிகள்,அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்காலிய உண்டியல்களில் காணிக்கையாக ரூ.11லட்சத்து 15 ஆயிரத்து 840 இருந்தது. கோயில் வளாகத்தில் உள்ள நிரந்த உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. காணிக்கை எண்ணும் பணியை கோயில் அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்காளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்.