/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ளத்தில் வீரபாண்டி ரோடு, குடிநீர் குழாய்கள் சேதம்
/
வெள்ளத்தில் வீரபாண்டி ரோடு, குடிநீர் குழாய்கள் சேதம்
வெள்ளத்தில் வீரபாண்டி ரோடு, குடிநீர் குழாய்கள் சேதம்
வெள்ளத்தில் வீரபாண்டி ரோடு, குடிநீர் குழாய்கள் சேதம்
ADDED : அக் 23, 2025 04:59 AM

தேனி: வீரபாண்டி முல்லை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 700 மீட்டர் தார்ரோடு, 3 பகிர்மான குழாய்கள் சேதமடைந்தது.
இப்பேரூராட்சியில் 15 வார்டுகளில் 16,200 பேர் வசிக்கின்றனர். தினமும் 11 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த அக்.17 பெய்த கனமழையால் முல்லை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அக்.18 அதிகாலையில் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் இருந்து தலைமை நீரேற்று நிலையம் செல்லும் ஒன்றரை கி.மீ., ரோட்டில் 700 மீட்டர் துார ரோடு வெள்ளம் அடித்து சென்றது.
இதனால் நீரேற்று நிலையத்திற்கு செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் வயலில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் 3 பிரதான பகிர்மான குழாய்கள் சேதமடைந்துள்ளது.
தண்ணீரின் அளவு குறைந்த பின்பேபணிகளை துவக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செயல் அலுவலர் கணேசன் கூறுகையில், குடிநீர் பிரச்னையை சமாளிக்க 5 டேங்கர் லாரிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம்செய்கிறோம்.
இதுதவிர பேரூராட்சியில் 30 போர்வெல்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். பராமரிப்புப் பணிகளை விரைவில் துவக்க உள்ளோம். குடிநீர் புகார்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்,' என்றார்.