/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி உழவர் சந்தையில் சுவர் சீரமைக்காததால் காய்கறி திருட்டு
/
தேனி உழவர் சந்தையில் சுவர் சீரமைக்காததால் காய்கறி திருட்டு
தேனி உழவர் சந்தையில் சுவர் சீரமைக்காததால் காய்கறி திருட்டு
தேனி உழவர் சந்தையில் சுவர் சீரமைக்காததால் காய்கறி திருட்டு
ADDED : செப் 06, 2025 04:10 AM

தேனி: தேனி உழவர் சந்தையில் இரு மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்த சுவரை சீரமைக்காமல் வலை கொண்டு மூடி வைத்துள்ளனர்.
தேனி உழவர் சந்தையில் 45 கடைகள் உள்ளன. இங்கு காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை காய்கறி விற்பனை நடைபெறும். மதியம் 12:30 மணி அளவில் மேற்குபுற சுற்றுசுவர் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவில் உட்புகுவதும், காய்கறிகளை திருடி செல்வதும் தொடர்கிறது. இதனால் அந்த சுவரை சீரமைக்க வேண்டும் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.
வேளாண் விற்பனை, வணிக பிரிவு துணை இயக்குநர் சுரேஸ் கூறியதாவது, 'சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும். அதற்காக சென்னையில் டெண்டர் விடப்பட்டுள்ளது,' என்றார்.