ADDED : பிப் 19, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளால் டூவீலரில் செல்பவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் தடுப்பு கம்பியை தாண்டி செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. தமிழக கேரள எல்லையான இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம். டூவீலரில் செல்பவர்கள் ரோட்டின் ஓரத்தில் செல்லும்போது செடிகளால் விபத்தில் சிக்குகின்றனர். பல வளைவான ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் டூவீலர் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளில் ரோட்டோர செடிகளை அகற்ற முன்வர வேண்டும்.

