/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முகூர்த்த நாட்களில் டெலிவரி கேட்பதால் வாகன பதிவில் சிக்கல்
/
முகூர்த்த நாட்களில் டெலிவரி கேட்பதால் வாகன பதிவில் சிக்கல்
முகூர்த்த நாட்களில் டெலிவரி கேட்பதால் வாகன பதிவில் சிக்கல்
முகூர்த்த நாட்களில் டெலிவரி கேட்பதால் வாகன பதிவில் சிக்கல்
ADDED : டிச 11, 2025 05:46 AM
தேனி: பண்டிகை, சுப முகூர்த்த நாட்களில் வாகன டெலிவரி கேட்கும் வாடிக்கையாளர்களால் வாகன பதிவு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கார், டூவீலர், கனரக வாகன விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ள வாகன பதிவு எண்ணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து, அதன் நம்பர் பிளேட்டை வாகனத்தில் பொருத்திய பின்பே, டெலிவரி கொடுக்க வேண்டும் என, மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனால் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, சுப மூகூர்த்த நாட்களில் டெலிவரி எடுக்க காத்திருந்த வாடிக்கையாளர்களும், விரும்பிய பேன்சி எண் கேட்ட வாடிக்கையாளர்களாலும் பதிவு எண் பெற தாமதம் ஏற்பட்டது. விற்பனை நிறுவனங்கள் வாகனங்களை பதிவு செய்வதை தாமதப்படுத்தின. விபத்துக்களை தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணையம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜன.1., ஆங்கில புத்தாண்டு, டிச.25ல்கிறிஸ்துமஸ், மேலும் டிசம்பரில் 5 சுப மூகூர்த்த நாட்கள் உள்ளன.
இந்த நாட்களில் வாகனங்களை டெலிவரி கேட்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.ஆனால் அவர்கள் கேட்கும் வாகன பதிவு எண் (பேன்சி எண்கள்) பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் பதிவு பணிகளை காலதாமதம் செய்வதை தவிர்க்க,டெலிவரி நாளை மாற்றும்படி வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். இதில் அதிருப்தி அடையும் ஒரு சில வாடிக்கையாளர்கள் வாகனமே வேண்டாம் என கூறிபணத்தை திருப்பிக் கேட்கும் நிலை ஏற்படுகிறது.

