/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மா மரத்தில் தத்துப்பூச்சி, சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
/
மா மரத்தில் தத்துப்பூச்சி, சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
மா மரத்தில் தத்துப்பூச்சி, சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
மா மரத்தில் தத்துப்பூச்சி, சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : டிச 11, 2025 05:46 AM
தேனி: மா மரத்தில் பூக்கள் பூக்கும் நேரத்தில் தாக்கும் தத்துப்பூச்சி, சாம்பல் நோயை கட்டுப்படுத்தி எவ்வாறு மகசூலை அதிகரிக்கலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நிர்மலா விளக்கி உள்ளனர்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில் 9200 எக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம், போடி, கம்பம், தேனி வட்டாரங்களில் அதிக அளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது கவாத்து பணிகள் முடிந்து, பூக்கள் பூக்கும் நிலையில் உள்ளது. இந்த பூக்களை தத்து பூச்சிகள், சாம்பல் நோயில் இருந்து காப்பது அவசியம்.தத்து பூச்சிகள் பூக்களில் உள்ள சாற்றை உறிஞ்சி மகசூலை பாதிக்கும்.
இவற்றின் தாக்குதலை தடுக்க மா மரங்களில் கந்தகம் 2 கிராம், இமிடா குளோப்ரைடு 0.2 மி.லி மருந்தை ஒருலிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் தத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய் பாதித்த மரங்களில் இலை, பூக்கள், தண்டு, பழங்களில் பூசணம் காணப்படும். இதனால் பழங்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உதிர்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த கந்தகம் 2 கிராம்அல்லது கார்பென்டசிம் 1 கிராமை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். பூ எடுத்த பின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பொட்டாசிம் நைட்ரேட் கலந்து தெளித்தால் பிஞ்சுகள் உதிராது. ஒருலிட்டர் தண்ணீரில் 2 மி.லி., என்.ஏ.ஏ., மருந்தை கலந்து தெளித்தால் பூக்கள் காய்களாக மாறும் திறன் அதிகரிக்கும் என்றார்.

