/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மது கடத்தலில் கைப்பற்றிய வாகனங்கள் டிச.18 ஏலம்
/
மது கடத்தலில் கைப்பற்றிய வாகனங்கள் டிச.18 ஏலம்
ADDED : டிச 06, 2024 05:56 AM
தேனி: மாவட்டத்தில் மதுகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு போலீசாரால் கைப்பற்றிய வாகனங்கள் பொது ஏலம் விடப்படப்பட உள்ளது. இது குறித்து எஸ்.பி.,, சிவபிரசாத் கூறியிருப்பதாவது:
போலீசாரால் கைப்பற்றப்பட்ட 41 வாகனங்கள் தேனி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கான பொது ஏலம் டிச.18 ல் காலை 11:00 மணிக்கு மைதானத்திலேயே நடக்கிறது.. ஏலம் எடுக்க விரும்புவோர், டூவீலர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.8 ஆயிரமும் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
வாகனங்களை பார்வையிடலாம். முன்பதிவு செய்த வாகனத்திற்கு மட்டும் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கு ஜி.எஸ்.டி., வரி தனியாக வசூலிக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.