/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2957 புதிய ரேஷன்கார்டு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
/
2957 புதிய ரேஷன்கார்டு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
ADDED : பிப் 05, 2025 07:15 AM
தேனி: மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2957 விண்ணப்பங்கள் 'சூப்பர் செக்கிங்' எனும் தீவிர சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. 2024 ஜூன் முதல் நவம்பர் வரை 3ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் விண்ணப்பங்களை தாலுகா அலுவலங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் சரிபார்த்தனர்.
இதில் தாலுகா வாரியாக தேனி 283, பெரியகுளம் 744, போடி 393, ஆண்டிபட்டி 748, உத்தமபாளையம் 789 என மொத்தம் 2957 விண்ணப்பங்கள் தேர்வாகின. இதில் குறிப்பிட்ட விண்ணப்பங்களை தேர்வு செய்து ஆர்.டி.ஓ., நிலையிலான அலுவலர்கள் தாலுகா வாரியாக 'சூப்பர் செக்கிங்' எனப்படும் கள ஆய்வு செய்ய உள்ளனர்.