/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ADDED : ஏப் 23, 2025 05:48 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கானஇடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது.
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 3 வார்டுகள்,22 பேரூராட்சிகளில் 7 வார்டு மொத்தம் 10 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்தலில் ஓட்டுப்பதிவிற்காக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 100 பேலட் யூனிட்கள், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 60 கன்ட்ரோல் யூனிட்கள் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை முதற்கட்ட சரிபார்ப்பு பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுவர 60 பேலட் யூனிட்கள், 30 கன்ட்ரோல் யூனிட்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியும் நடந்து வருகிறது.