/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செல்லப்பிராணிகளுக்கு மனிதர்கள் சாப்பிடும் உணவை வழங்க கூடாது கால்நடை மருத்துவக்கல்லுாரி ேபராசிரியர் தகவல்
/
செல்லப்பிராணிகளுக்கு மனிதர்கள் சாப்பிடும் உணவை வழங்க கூடாது கால்நடை மருத்துவக்கல்லுாரி ேபராசிரியர் தகவல்
செல்லப்பிராணிகளுக்கு மனிதர்கள் சாப்பிடும் உணவை வழங்க கூடாது கால்நடை மருத்துவக்கல்லுாரி ேபராசிரியர் தகவல்
செல்லப்பிராணிகளுக்கு மனிதர்கள் சாப்பிடும் உணவை வழங்க கூடாது கால்நடை மருத்துவக்கல்லுாரி ேபராசிரியர் தகவல்
ADDED : ஏப் 11, 2025 05:19 AM

தேனி: ''செல்லப்பிராணிகளுக்கு மனிதர்கள் சாப்பிடும் உணவுகளை வழங்க கூடாது. டாக்டர் ஆலோசனைப்படி உணவு வழங்குவது ஆரோக்கியமானது என கால்நடை மருத்துவக்கல்லுாரி அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் கோகுலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை, நாமக்கல், உரத்தநாடு, சின்னசேலம், தேனியில் மட்டுமே கால்நடை அறிவியல் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படுகின்றன. தேனி தப்புக்குண்டில் 2020ல் கால்நடை மருத்துவக்கல்லுாரி ஆராய்ச்சி நிலையம் செயல்பட துவங்கியது. இது கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இங்கு அறுவை சிகிச்சை துறையில் துறைத் தலைவர், பேராசிரியர், உதவி பேராசிரியர், பணியாளர்கள், இறுதியாண்டு மாணவர்கள் என 56 பேர் உள்ளனர்.
அறுவை சிகிச்சை முறைகள், விவசாயிகள், பொது மக்களுக்கான பயன்கள் குறித்து துறைத் தலைவர் கோகுல கிருஷ்ணன் தினமலர் அன்புடன் அதிகாரி'பகுதிக்காக பேசியதாவது:
கால்நடைகள் செல்லப்பிராணிகளுக்கான அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளதா
இங்கு அதிநவீன அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளது. குறிப்பாக கால்நடைகள் இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி விடுவதால் உணவுக் குழலில் அமைப்பை கண்டறிந்து அகற்றும் எண்டோஸ்கோப் கருவி. உள்ளுருப்பு கட்டிகளை அகற்றவும், திசு மாதிரிகளை சேகரிக்க, செல்லப் பிராணிகளில் கருத்தடை, பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்களை அகற்ற குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை முறையான லேப்ராஸ்கோப் கருவி, விலங்குகளுக்கு சுவாசப்பாதை மூலம் மயக்க மருந்து செலுத்தும் கருவி, தசை முறிவு,தசை வீக்கத்தை குணப்படுத்த பிசியோதெரபி கருவி, கண்புரை, கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆப்தமாஸ்கோப். காது சம்மந்தமான நோய்களை கண்டறிய ஓட்டோஸ்கோப், பல் சிகிச்சை அளிக்க டெண்டல் ஸ்கேலார் மற்றும் இம்பிளாண்ட் கருவிகள், கால்நடைகளில் கர்ப்பநிலை, சிசுக்களின் வளர்ச்சி, உள்ளுருப்புகளில் ஏற்படும் நோய்களை கண்டறியும் மீயொலி கருவி, எலும்பு முறிவுகளை கண்டறியும் கதிர்வீச்சு கருவிகள் உட்பட அனைத்துவிதமான அதிநவீன கருவிகளும் உள்ளன. அதனால் கால்நடை, செல்லப்பிராணிகள் வளர்ப்போர்கள் இந்த நவீன வசதிகளுடன் கூடிய இம் மையத்திற்கு கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெறலாம்.
இதுவரை எத்தனை அறுவை சிகிச்சை நடந்துள்ளது
தற்போது வரை 28 சிறிய பிராணிகள், 15 கால்நடைகள் என 43 கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சைஅளித்துள்ளோம். அவைகள் குணமடைந்து நல்ல நிலையில் உள்ளன. 28 சிறிய பிராணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அதில் 6 பூனைகள், 22 நாய்கள் அடங்கும். 22 நாய்களில் பெரும்பாலும் பாரின் பாடி' என்றழைக்கக்கூடிய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் உட்கொண்டதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளோம். கல்லை விழுங்கிய நாயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி காப்பாற்றினோம். விதை வீக்கம் ஏற்பட்ட நாய்களை அறுவை சிகிச்சையில் காப்பாற்றி உள்ளோம்.
நாய்களுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்பு என்ன
செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்போர். முதலில் நெய், ரொட்டி, வீட்டில் மனிதர்கள் சாப்பிடுவதை எல்லாம் வழங்கக்கூடாது. முறுக்கு, பொங்கல் என மனிதர்கள் சாப்பிடும் உணவு வகைகளை நாய்களுக்கு, செல்லப் பிராணிகளுக்கு வழங்கக் கூடாது. பல்வேறு விதமான நாய்களுக்கு உதன் உடலமைப்பிற்கு ஏற்ப உணவின் தேவை மாறுபடும். அதை அறிந்து கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்குவது ஆரோக்கியமானது.
பெரிய கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சை குறித்து
பெரிய பிராணிகளான 16 கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதில் 7 மாடுகள், 6 ஆடுகள், ஒரு மட்டக்குதிரை, 2 குதிரைகள் அடங்கும். இதில் பல்வேறு பாதிப்புகளை சீரமைத்துள்ளோம். இதில் கண் புற்றுநோய் கட்டி அகற்றம், மாட்டின் கொம்பு பாதிப்பிற்கான சிகிச்சை, ரேக்ளா ரேஸில் பங்கேற்கும் காளைக்கு கல் கிழித்த தசை அறுவை சிகிச்சை மூலம் சீரமைப்பு, கொம்பு பாதிப்பு என சிகிச்சையை செய்து குணப்படுத்தி உள்ளோம். அதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தயக்கம் இன்றி கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு வந்து இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் விபரங்களுக்கு 98401- 95986 என்ற அலைபேசியில் அழைக்கலாம்.

