/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ், டிப்போவில் முறைகேடு விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடிப்பு
/
அரசு பஸ், டிப்போவில் முறைகேடு விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடிப்பு
அரசு பஸ், டிப்போவில் முறைகேடு விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடிப்பு
அரசு பஸ், டிப்போவில் முறைகேடு விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடிப்பு
ADDED : பிப் 19, 2025 06:44 AM
மூணாறு: மூணாறில் அரசு பஸ், டிப்போ ஆகியவற்றில் பல்வேறு முறைகேடுகளை விஜிலன்ஸ் பிரிவினர் கண்டு பிடித்தனர்.
மூணாறில் உள்ள அரசு பஸ் டிப்போவில் பயணிகள் எவ்வித தகவலும் பெற இயலவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் டிப்போவில் பரிசோதனை நடத்தினர்.
அதில் இரவு நேர பணியில் ஈடுபட்ட ஸ்டேஷன் மாஸ்டர், பட்ஜெட் டூரிசம் பொறுப்பாளர் ஆகியோர் தினமும் உறங்கியதால் பயணிகளுக்கு முறையாக தகவல் அளிக்கப்படவில்லை என தெரியவந்தது. அதேபோல் மூணாறில் இருந்து தினமும் இரவு 9:00 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் பஸ்சை வழியில் நேற்று முன்தினம் இரவு பரிசோதனை நடத்தினர். அதில் மூன்று பயணிகளிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்கவில்லை எனவும் தெரியவந்தது.
போக்குவரத்து துறை அமைச்சர், நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் முறைகேடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.