/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடுப்பணைக்கு இடையூறு கிராம கமிட்டியினர் புகார்
/
தடுப்பணைக்கு இடையூறு கிராம கமிட்டியினர் புகார்
ADDED : நவ 27, 2024 08:06 AM
தேனி : கலெக்டர் அலுவலகத்தில் பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டியை சேர்ந்த ஆறுார் கிராம நலக்கமிட்டி தலைவர் காந்தசொரூபன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.
இவர்கள் மனுவில், 'வாழையாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது ஆறுார் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை.
தடுப்பணை அமைந்தால் ஆறு கிராமங்களிலும் விவசாய தேவை, குடிநீர் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.
தடுப்பணை அமைக்க ஆய்வுப்பணிகள் தற்போது நடக்கிறது.
ஆய்விற்கு செல்லும் வாகனங்களை செல்ல விடாமல் சிலர் தடுத்து, அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.