/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் கிராம விவசாயிகள் ஆர்வம்
/
நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் கிராம விவசாயிகள் ஆர்வம்
நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் கிராம விவசாயிகள் ஆர்வம்
நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் கிராம விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 17, 2025 05:29 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பால் வருவாய் ஈட்டுகின்றனர்.
இப்பகுதியில் பல கிராமங்கள் மலைப்பகுதியை சார்ந்தும், வைகை ஆற்றின் கரையோர பகுதிகளிலும் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி, இறவை பாசன விவசாயம் நடந்து வருகிறது. விவசாய நிலங்களில் கிடைக்கும் தீவனத்தை பயன்படுத்தி ஆடுகள், கறவை மாடுகள், நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகின்றனர். விவசாய நிலங்களில் இரைதேடி, ஆரோக்கியத்துடன் வளர்கின்றன.
தற்போது நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.500 வரையும், நாட்டுக்கோழி முட்டை ஒன்று ரூ.15 வரையும் விலை போகின்றன. விவசாயிகள் கூறியதாவது: நாட்டுக்கோழிகள், முட்டைகளை சொந்த தேவை போக விற்பனையும் செய்வதால் கணிசமான வருவாய் கிடைக்கிறது. திறந்த வெளியில் திரியும் நாட்டுக்கோழிகளை நாய்கள், பூனைகள், பறவைகளிடம் இருந்து பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் அவைகளின் பாதுகாப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்., என்றனர்.