/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு அமைக்க வனத்துறை எதிர்ப்பு கிராம மக்கள் ரோடு மறியல்
/
ரோடு அமைக்க வனத்துறை எதிர்ப்பு கிராம மக்கள் ரோடு மறியல்
ரோடு அமைக்க வனத்துறை எதிர்ப்பு கிராம மக்கள் ரோடு மறியல்
ரோடு அமைக்க வனத்துறை எதிர்ப்பு கிராம மக்கள் ரோடு மறியல்
ADDED : ஜூலை 19, 2025 12:45 AM
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை - பொன்னம்படுகை ரோட்டில் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் ரோடு அமைக்க வனத்துறை எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.
6 கி.மீ., தூரமுள்ள மயிலாடும்பாறை - பொன்னம்படுகை ரோடு கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்பட்டதால் ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பில் தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிவடையும் நிலையில் ரோட்டில் குறிப்பிட்ட இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதாக கூறி தார் ரோடு அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.500 மீட்டர் இடைவெளியை தவிர்த்து மற்ற இடங்களில் ரோடு அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் தார் ரோடு அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனை கண்டித்து பொன்னம்படுகை, மயிலாடும்பாறை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து மயிலாடும்பாறை போலீசார் மற்றும் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், மாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். குறிப்பிட்ட இடத்தில் ரோடு அமைத்தால் தான் ரோடு பணிகள் முழுமை பெறும். வனத்துறைக்குட்பட்ட இடத்தில் ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

