/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளைபொருட்களை 7 கி.மீ., சுமந்து செல்லும் அவலம் பாதை வசதி கோரி கிராமத்தினர் மனு
/
விளைபொருட்களை 7 கி.மீ., சுமந்து செல்லும் அவலம் பாதை வசதி கோரி கிராமத்தினர் மனு
விளைபொருட்களை 7 கி.மீ., சுமந்து செல்லும் அவலம் பாதை வசதி கோரி கிராமத்தினர் மனு
விளைபொருட்களை 7 கி.மீ., சுமந்து செல்லும் அவலம் பாதை வசதி கோரி கிராமத்தினர் மனு
ADDED : பிப் 04, 2025 05:45 AM

தேனி: கொட்டக்குடி சாலைப்பாறைக்கு பாதை வசதி இல்லாததால் விளைப்பொருட்களை தலைச்சுமையாக கொண்டு செல்லும் சூழலும், நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதால் ரோடு வசதி செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராமத்தினர் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதாஹனீப், சமூக பாதுகாப்புத்திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொட்டக்குடி சாலைப்பாறை பாக்கியராஜ், பொதுமக்கள் வழங்கிய மனுவில், குரங்கனியில் இருந்து சாலைப்பாறை வரை வண்டி பாதை அமைத்து தரவேண்டும். பாதையில் அதிக புதர்மண்டி காணப்படுவதால் வனவிலங்குகள் வருவது தெரிவதில்லை.
பாதையை சீரமைக்க வனத்துறை அனுமதிப்பதில்லை.
விளைபொருட்களை தலைச்சுமையாக 7 கி.மீ., கொண்டு வரும் நிலை உள்ளது. உடல்நலக்குறைவினால் பாதிக்கப்படவர்களுக்கும் மருத்துவமனைக்கு கொண்டு வர சிரமம் அடைகின்றோம்.
அதே போல் 20 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட அனுமந்த பட்டாவை நத்தம் பட்டாவாக மாற்றி வழங்க வேண்டும் எனஇருந்தது.
கோட்டூர் முத்துச்சாமி, அருண்ராஜா, செல்லப்பாண்டி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், கோட்டூர் ஊராட்சி செயலாளர் உள்ளூரை சேர்ந்தவர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரினால், சரியான பதில் வழங்குவதில்லை.
உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரை வேறு ஊராட்சிக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். என இருந்தது.

