/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராமத்தினர் தர்ணா
/
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராமத்தினர் தர்ணா
ADDED : ஜூலை 09, 2025 07:14 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பூமலைக்குண்டு கிராமத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்நடந்தது.
கூட்டத்தில் பட்டா வழங்க கோரி, உதவி உபகரணங்கோரி, உதவித்தொகை கேட்டு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 320க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி ஊராட்சி அடைக்கம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் வழங்கிய மனுவில், 'படிப்பிற்காக ஒக்கரைப்பட்டி செல்கிறோம்.
பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
பள்ளி நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க,' கோரியிருந்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்ற தர்ணாபூமலைக்குண்டு கிராம பொதுமக்கள் வடிவேல், சுதாகர், ராஜன் உள்ளிட்டோர் தலைமையில் மனு அளிக்க வந்தனர். போலீசார் அனுமதிக்காததால் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.
மனுவில், 'கிரமத்திற்கு பாத்தியப்பட்ட 89 ஏக்கர் நிலத்தை தனிநபர் போலி பட்டா தயாரித்துள்ளார். அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அந்த பத்திர பதிவுகளை ரத்து செய்து நிலத்தை மீட்டு தர வேண்டும்,' என்றிருந்தது.

