/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொரோனா தொற்றுக்கு விழுப்புரம் வாலிபர் பலி
/
கொரோனா தொற்றுக்கு விழுப்புரம் வாலிபர் பலி
ADDED : ஜூன் 07, 2025 02:48 AM
விக்கிரவாண்டி:கொரோனா தொற்றுக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி மகன் தியாகராஜன், 34, ஹைதராபாத் தனியார் கம்பெனியில் லிப்ட் பராமரிப்பாளராக பணியாற்றினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு கடந்த 28ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜிப்மரில் கொரோனா தொற்றுக்கு தனி சிகிச்சை வார்டு இல்லாததால், வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு அவருக்கு, மூச்சு திணறல் அதிகமானது. முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9:40 மணிக்கு இறந்தார்.
இறந்த தியாகராஜன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவ கல்லுாரி அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவ துவங்கி இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இறந்த தியாகராஜன் உடன் வந்த அவரது சகோதரிக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.