ADDED : ஆக 06, 2025 08:46 AM
பெரியகுளம் : தேனி, அரண்மனைப்புதூர் காளியம்மன் கோயில் நடுத்தெரு ஹரிகிருஷ்ணன் 67. இவரது தங்கை திலகவதி 47. பார்வை குறைபாட்டால் திருமணம் செய்யவில்லை.
அண்ணன் பராமரிப்பில் இருந்தார். திலகவதி அவ்வப்போது கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவது வழக்கம். ஜூலை 26 ல் கோயிலுக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. தங்கையை காணாது ஹரிகிருஷ்ணன் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
நேற்று முன்தினம் பெரியகுளம் எ.புதுப்பட்டி பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற பெண் மீது, வத்தலக்குண்டிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் மோதி பெண் பலியானார். வடகரை போலீசார் அடையாளங்களை ஹரிகிருஷ்ணனிடம் தெரிவித்தனர்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த உடலை பார்த்த ஹரிகிருஷ்ணன், தங்கை திலகவதி என்பதை உறுதி செய்தார். விபத்து ஏற்படுத்திய கோவை பீளமேடைச் சேர்ந்த டிரைவர் விக்னேஷிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.