ADDED : ஜன 13, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆண்டிபட்டியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நடந்தது. ஹிந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார்.
ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பால்பாண்டி, முருகன் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் இளைஞர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். விவேகானந்தர் படத்திற்கு மாலை அனைத்து மரியாதை செய்து தேசிய இளைஞர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நகர ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஷ்குமார், சுதன், நிர்வாகிகள் பாண்டீஸ், பிரகதீஷ், பால்பாண்டி, முருகன், துரைமுருகன், ஜெயவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.