UPDATED : அக் 24, 2026 05:59 PM
ADDED : அக் 24, 2026 05:54 PM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: திருமலாபுரம் ஊராட்சியில் விபி ஜி ராம்ஜி திட்டத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மரிக்குண்டு கிராமத்தில் இருந்து அம்மச்சியாபுரம் செல்லும் ரோட்டில் 2 ஏக்கர் பரப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் குளம் அமைப்பதால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகரிக்கும்.
கடந்த சில வாரங்களாக தொடரும் இப்பணியில் தற்போது குளத்தின் கரையை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் பணிகள் நிறைவு பெறும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
