/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறை வசதி தேவை
/
கம்பம் அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறை வசதி தேவை
கம்பம் அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறை வசதி தேவை
கம்பம் அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறை வசதி தேவை
ADDED : ஜன 18, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மாதந்தோறும் 200 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது. ஏற்கனவே இருந்த சமையற் கூடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், புதிய சமையற் கூடம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.25 லட்சத்தில் சமையற் கூடம் கட்டி திறக்கப்பட்டது. அதே சமயம் பழைய சமையற்கூடம் பூட்டி வைக்கப்பட்டது.
இக் கட்டடத்தை நோயாளிகள் உடன் வருபவர்கள் காத்திருக்கும் அறையாக மாற்றி பயன்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.