/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
/
தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
ADDED : ஏப் 27, 2025 06:56 AM

தேனி : தேனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ளது. இதனால் நகராட்சி நிதி லட்சக்கணக்கில் வீணாகி உள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் தலா ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து ஒண்டிவீரன் நகர், பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெருக்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. இவை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இரு இயந்திரங்கள் பயன்பாடு இன்றி முடங்கியது. நகராட்சி நிதி லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட இயந்திரத்தின் சில பகுதிகளை சமூக விரோதிகள் திருடி சென்றனர். சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு அமைக்கப்பட்ட அமைப்பு தற்போது சிலரது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி கமிஷனர் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.