
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி நகராட்சி முதலாவது வார்டு புதூரில் பொது குடிநீர் வசதி இல்லாததால் போர்வெல் தண்ணீர் தொட்டி நகராட்சி மூலம் அமைக்கப்பட்டது.
குடிநீர் கிடைக்காத நாட்களில் பிற போர்வெல் நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். தொட்டியில் நீரை நிரப்ப மின்மோட்டர் சுவிட்ச்சை இயக்கும் மக்கள் தொட்டியில் நீர் நிறைந்தும் சுவிட்ச் ஆப் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் நகராட்சிக்கு மின் செலவும் அதிகரிக்கிறது. தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.