/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெடுஞ்சாலையில் ஓடும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு
/
நெடுஞ்சாலையில் ஓடும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு
ADDED : ஜூலை 20, 2025 05:05 AM

கூடலுார்: கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் கழிவு நீரோடை வசதி செய்து தராததால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நெடுஞ்சாலையில் ஓடி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரையுள்ள 4. கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு கட்டுப்பட்டதாகும்.
இச்சாலையில் குடியிருப்புகள் வியாபார நிறுவனங்கள் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரோடு அகலப்படுத்தி இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டன. ஆனால் மேற்குப் பகுதியில் கழிவுநீர் செல்லும் வகையில் ஓடை அமைக்கப்பட்டது. அதே வேளையில் கிழக்குப் பகுதியில் பல இடங்களில் கழிவு நீர் வெளியேறுவதற்கான ஓடை எதுவும் அமைக்கப்படவில்லை.
அந்த நேரத்தில் பொதுமக்கள் கழிவுநீரோடை அமைக்க வலியுறுத்தினர். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் ரோடு அமைக்கும் பணி முடிவடைந்தது.
இந்நிலையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் ரோட்டின் மீது செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் அபாயம் உள்ளது.
யார் அமைப்பது
மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையில் கழிவு நீரோடையை நெடுஞ்சாலைத்துறை அமைப்பதா, அல்லது நகராட்சி சார்பில் அமைப்பதா என்பதில் பல மாதங்களாக போட்டிநிலவுகிறது.
இரு துறைக்கு நடக்கும்இப்போட்டியால் பொதுமக்கள் துர்நாற்றத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துஉள்ளனர்.