/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 21, 2025 02:18 AM
பெரியகுளம்:கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்துச் சென்றனர்.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதி பாம்பார்புரம், வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
ஜூலை 13 முதல் நீர் வரத்து குறைந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் அருவி நுழைவுப் பகுதியை மூடுவதற்கு வனத்துறை நிர்வாகம் திட்டமிட்டது. இந்நிலையில் இரு நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் வந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.-