/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஏர் வால்வு' உடைந்து வீணாகும் குடிநீர்
/
'ஏர் வால்வு' உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : நவ 25, 2024 06:20 AM

கம்பம்: கம்பம் மெயின் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் குடிநீர் வாரியத்தின் 'ஏர் வால்வு' உடைந்து பல மணி நேரங்கள் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.
லோயர் கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து குடிநீர் பம்பிங் செய்து கம்பம், கூடலுார், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு வினியோகம் ஆகிறது. குடிநீர் வாரியத்தின் சார்பில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்திற்கு 2 பகிர்மான வழித்தடங்கள் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. அதில் பழைய பகிர்மான பிரிவு கம்பம் நகரின் மெயின்ரோடு வழியாக செல்கிறது.
நேற்று காலை 7:00 மணியளவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில், பயணியர் நிறுத்தம் அருகில் உள்ள ஜங்சன் பாயிண்டில் 'ஏர் வால்வு' உடைந்தது.
இதனால் குடிநீர் குபு, குபுவென வெளியேற துவங்கியது. காலை 7:00 மணி முதல் 10:00 மணிக்குள் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாக்கடைக்கு சென்றது. குடிநீர் வாரிய அதிகாரிகள் லோயர் கேம்பில் தண்ணீரை நிறுத்தினார்கள். அதன் பின் காலை 11:00 மணியளவில் முழுமையாக நின்றது.