ADDED : நவ 23, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே டி.வி.ரெங்கநாதபுரம் - - கொண்டமநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் குடிநீர் மெயின் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததால் தண்ணீர் பீறிட்டு வெளியேறி இரு நாட்களாக வீணாகிறது.
இப்பகுதியில் சேடப்பட்டி - ஆண்டிபட்டி கூட்டுக்குடி திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் உள்ளது. இங்கு வெளியேறும் நீர் எந்த திட்டத்தில் உள்ள குழாய் என்பது தெரியவில்லை. இரு நாட்களாக குடிநீர் வீணாகி அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. குடிநீர் வீணாவதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.