ADDED : செப் 05, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:லோயர்கேம்பில் இருந்து கூடலுாருக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக நெடுஞ்சாலை ஓரத்தில் பகிர்மானக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குழாயின் மேல்பகுதியிலேயே ரோடு அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் அடிக்கடி குழாய் உடைவது தொடக்கதையாக உள்ளது.
நேற்று பொதுப்பணித்துறை ஆய்வாளர் மாளிகை அருகில் லோயர்கேம்பில் இருந்து கூடலுார் வரும் பகிர்மான குழாய் உடைந்தது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி மாநில நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கியது. விரைவில் சீரமைப்பு பணிகளை துவக்க கூடலுார் நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.