/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரை தளத்திற்கு உயர்ந்த கிணறுகளின் நீர்மட்டம்
/
தரை தளத்திற்கு உயர்ந்த கிணறுகளின் நீர்மட்டம்
ADDED : நவ 05, 2024 06:05 AM

ஆண்டிபட்டி: மூல வைகை ஆற்றில் இருந்து ராஜ வாய்க்கால் மூலம் வரும் நீரால் அம்மச்சியாபுரம் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் தரை தளத்திற்கு உயர்ந்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் நடவுக்கான பணிகளை விவசாயிகள் முழு வீச்சில் துவக்கி உள்ளனர். மூலவகை ஆற்றில் தடுப்பணை அமைத்து ராஜவாய்க்கால் மூலம் வரும் நீரால் அம்மச்சியாபுரத்தில் பல ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில வாரங்களாக ராஜ வாய்க்காலில் வரும் நீரை நெல் நடவுக்காக விவசாய நிலங்களில் தேக்கி வைத்துள்ளனர். தேக்கி வைத்துள்ள நீர் கிணறுகளில் ஊற்றெடுப்பதால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் தரை தளத்திற்கு உயர்ந்துள்ளது. தற்போது உள்ள சூழலில் கிணற்று நீரை பயன்படுத்துவதற்கான தேவை இப்பகுதி விவசாயிகளுக்கு இல்லை என்பதால் மின் மோட்டார்களை கழற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர். இன்னும் சில மாதங்களுக்கு வாய்க்காலில் வரும் நீரே விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.