/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை ஆற்றில் செல்லும் நீரால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

ADDED : டிச 04, 2024 08:23 AM
ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரால் கரையோரங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு நவம்பர் 10 ல் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் குரியம்மாள்புரம், அய்யணத்தேவன்பட்டி, புதூர், வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, தருமத்துப்பட்டி, குண்டலப்பட்டி, புள்ளிமான் கோம்பை உட்பட பல கிராமங்களை கடந்த செல்கிறது. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
ஆற்றில் செல்லும் நீரால் கரையோர விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் ஆகியவை சாகுபடி செய்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: வைகை ஆற்றில் சில நாட்கள் நீர் வரத்து இருந்தாலே பாசனக் கிணறுகளில் நீர் சுரப்பு அதிகமாகும். கடந்த மூன்று வாரமாக வைகை ஆற்றில் நீர் செல்வதால் இறவை பாசன கிணறுகளில் நீர் சுரப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
வரும் கோடையிலும் விவசாயத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.