/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணலாறு, ஹைவேவிஸ் அணைகளில் நீர்மட்டம் திருப்தி: சுருளியாறு நிலையத்தில் தொடர் மின் உற்பத்தி

ADDED : செப் 06, 2025 04:08 AM

கம்பம்: மணலாறு, ஹைவேவிஸ் அணைகளில் போதிய அளவு நீர் மட்டம் தொடர்வதால் சுருளியாறு மின்நிலையத்தில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
சிறந்த சுற்றுலா தலமான மேகமலையில் ரோட்டை ஒட்டியே பல கி.மீ. தூரத்திற்கு ஒடும் அணை நீர், மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேக கூட்டங்கள் எழில் கொஞ்சும் பகுதிகளாகும்.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு இரவங்கலாறு, மகாராஜா மெட்டு போன்ற பகுதிகளில் தேயிலை தோட்டங்களும், நீர்த் தேக்கங்களும் உள்ளன.
மின்வாரிய கட்டுப்பாட்டில் ஹைவேவிஸ், மணலாறு , வெண்ணியாறு, இரவங்கலாறு நீர்த் தேக்கங்கள் உள்ளன . ஆண்டு முழுவதும் இந்த நீர்த் தேக்கங்களில் உள்ள நீரை பயன்படுத்தி சுருளியாறு நீர் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கோடை காலத்திலும் இங்கு மின் உற்பத்தி நடைபெறுகிறது. மேகமலையில் கிடைக்கும் மழை நீரை சிறிய நீர்த் தேக்கங்களில் தேக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக இங்குள்ள அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து திருப்தியான அளவில் பராமரிக்கப்படுகிறது. இதனால் சுருளியாறு மின் நிலையத்தில் தினமும் தேவைக்கேற்ப 20 முதல் 35 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.