/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழையால் கிணறு,போர்வெல்களில் நீர்மட்டம் உயர்வு: ஆண்டிபட்டியில் முழுவீச்சில் நடக்கும் விவசாய பணிகள்
/
தொடர் மழையால் கிணறு,போர்வெல்களில் நீர்மட்டம் உயர்வு: ஆண்டிபட்டியில் முழுவீச்சில் நடக்கும் விவசாய பணிகள்
தொடர் மழையால் கிணறு,போர்வெல்களில் நீர்மட்டம் உயர்வு: ஆண்டிபட்டியில் முழுவீச்சில் நடக்கும் விவசாய பணிகள்
தொடர் மழையால் கிணறு,போர்வெல்களில் நீர்மட்டம் உயர்வு: ஆண்டிபட்டியில் முழுவீச்சில் நடக்கும் விவசாய பணிகள்
ADDED : அக் 31, 2024 03:11 AM
ஆண்டிபட்டி: மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசன கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்வதால் விவசாய பணிகளை முழுவீச்சில் தொடர்கின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்தை மட்டுமே முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர். பாசனக்கிணறுகள், போர்வெல்களை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள், சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் ஆகியவற்றை ஆண்டு முழுவதும் பயிர் செய்கின்றனர்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து இறவை பாசன கிணறுகள், போர்வெல்களில் நீர் 200 அடிக்கும் கீழே சென்றது. இதனால் பலரும் இறவை பாசன நிலங்களில் விவசாயத்தின் அளவை குறைத்தனர். கடந்த ஆண்டு கை கொடுத்த மழையால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்தது.
நடப்பு ஆண்டிலும் அடுத்தடுத்து தொடரும் மழையால் சிறு குளங்கள், கண்மாய்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பும் அதிகமாகி உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
வருஷநாடு மலைப்பகுதியில் துவங்கும் மூல வைகை ஆற்று நீரால் கரையோர கிராமங்கள் செழிப்படைகிறது. குன்னூர், அம்மச்சியாபுரம் கிராமங்கள் மூலவைகை ஆற்றுநீரில் நேரடி பாசன வசதி பெறுகிறது. வைகை அணை நீர்தேக்கம் மூலமும் பலன் பெறுகிறது. வைகை அணையில் இருந்து கால்வாய், ஆற்றின் வழியாக செல்லும் நீரால் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சீரங்காபுரம், புதூர், அய்யணத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை கிராமங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் தொடர்கிறது. நடப்பு ஆண்டில் கிணறுகளில் உயரும் நீர் மட்டம் விவசாயிகளுக்கு ஊக்கம் ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த ஆண்டும் தண்ணீர் பாதிப்பு இல்லாத விவசாயத்தை தொடர முடியும் என்பதால் மகிழச்சியுடன் பணிகளை தொடர்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.