/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
450 வீடுகளின் குடிநீர் குழாய்கள் சேதம்
/
450 வீடுகளின் குடிநீர் குழாய்கள் சேதம்
ADDED : ஏப் 26, 2025 05:35 AM
மூணாறு :  மூணாறில் மகாத்மாகாந்தி காலனியில் 250 , ராஜீவ் காந்தி காலனியில் 200 என 450 வீடுகள் உள்ளன. அப்பகுதிகளுக்கு மூன்று கி.மீ., தொலைவில் இருந்து ஊராட்சி சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
அந்த இரண்டு பகுதிகளுக்கும் வரும் குடிநீர் குழாய்களை நேற்று காலை மர்ம மனிதர்கள் வெட்டி சேதப்படுத்தினர். அதனால் 450 வீடுகளுக்கு குடிநீர் முடங்கியது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் சேதப்படுத்தப்பட்ட குழாய்கள் மூலம்  குடிநீர் பெரும் அளவில் வீணானது.
இது போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதனால் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள் குறித்து  போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகாத்மாகாந்தி காலனி குடியிருப்போர் நல சங்க தலைவர் மணி தெரிவித்தார்.

