/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது
/
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது
ADDED : பிப் 27, 2026 05:07 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வெப்பம் நிலவியது. மழையின்றி நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அணைப்பகுதியில் நிலவி வந்த வெப்பம் சற்று குறைந்தது. தேக்கடியில் 24.6 மி.மீ., பெரியாறில் 6.6 மி.மீ., மழை பதிவானது.
இதனால் நீர்வரத்து வினாடிக்கு 199 கன அடியாக இருந்தது. நீர்வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருந்ததால் நீர்மட்டம் 117.10 அடியாக குறைந்தது(மொத்தம் உயரம் 152 அடி). நீர் இருப்பு 2105 மில்லியன் கன அடியாகும்.
நீர்மட்டம் குறைந்து வந்ததால் தமிழகப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டிருந்த 433 கன அடி நீர் நேற்று காலையில் இருந்து வினாடிக்கு 278 ஆக குறைக்கப்பட்டது.
நீர்திறப்பு குறைப்பால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 39 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 25 ஆக குறைந்தது.

