sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தென்னையை தாக்கும் வெள்ளை 'ரூகோஸ்' ஈக்கள் அதிகரிப்பு  விவசாயிகள் அவதி

/

 தென்னையை தாக்கும் வெள்ளை 'ரூகோஸ்' ஈக்கள் அதிகரிப்பு  விவசாயிகள் அவதி

 தென்னையை தாக்கும் வெள்ளை 'ரூகோஸ்' ஈக்கள் அதிகரிப்பு  விவசாயிகள் அவதி

 தென்னையை தாக்கும் வெள்ளை 'ரூகோஸ்' ஈக்கள் அதிகரிப்பு  விவசாயிகள் அவதி


ADDED : பிப் 27, 2026 07:19 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தென்னையில் வெள்ளை ரூகோஸ் ஈக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் வேர்வாடல் நோய், வெள்ளை ரூகோஸ் ஈக்கள் பாதிப்பால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தேங்காய் விலை பல மடங்கு அதிகரித்தது கிலோ ரூ. 70 வரை விற்பனையானது. இதனால் விளைச்சல் குறைவால் விவசாயிகளும், விலை உயர்வால் பொதுமக்களும் அவதியடைந்தனர். கடந்த ஆண்டு அக்.,ல் பெய்த மழையால் நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறைந்தது.

இதனால் உற்பத்தி அதிகரித்து தேங்காய் விலையும் குறைந்தது. தற்போது கிலோ ரூ. 50க்கு விற்பனையாகிறது. ஆனால், தற்போது மழை, குளிர் சீசன் நிறைவடைந்துள்ளதால் மீண்டும் வெள்ளை ரூகோஸ் ஈக்கள் தாக்குதல் அதிகரிக்க துவங்கி உள்ளது. மீண்டும் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மானியத்தில் மருந்துகள் வழங்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த புதிய ரகங்களை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us