ADDED : பிப் 27, 2026 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்,:கம்பம் சட்டசபை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகளை ந.ம.மு.க. ஆய்வை துவக்கி உள்ளது.
கம்பம் தொகுதியில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து தொகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகளை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளனர்.
கம்பத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு ஊர் என்ற முறையில் பூத் கமிட்டியிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து அக் கட்சியினர் கூறுகையில், 'ஏற்கெனவே அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் பூத்துகளுக்கும் கமிட்டி நியமித்துள்ளோம். தற்போது அவர்கள் தேர்தல் நாள்,அதற்கு முந்தைய நாளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை நடக்கிறது,' என்றனர்.

