/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
/
பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஜூலை 30, 2025 12:32 AM

பெரியகுளம : பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகுளம் நகராட்சிக்கு தினமும் பொதுமக்கள் வீட்டு வரி, குழாய் வரி உட்பட வரி இனங்கள் செலுத்தவும், பல்வேறு கோரிக்கைக்காக வருகின்றனர்.
இவர்களும், நகராட்சி கூட்டத்திற்கு வரும் கவுன்சிலர்கள், அலுவலகத்தில் வெளியே வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்திலிருந்து குடிநீரை பருகி வந்தனர். அலுவலகம் வளாகத்தில் செயல்படும் ஆதார் மையத்திற்கு பெரியகுளம் தாலுகா கடைக்கோடியில் உள்ள கெங்குவார்பட்டியில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.
20 முதல் 25 கி.மீ., பயணித்து தவித்து வந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வழங்கும் மிஷினில் ஆர்வத்துடன் தண்ணீர் குடிக்க வரும் போது மிஷின் பழுதாதால் தாகத்துடன் ஏமாற்றுகின்றனர்.
இந்த மிஷின் இரு மாதங்களாக பழுதடைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாத பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.