/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் நீர் நிறுத்தம்
/
வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் நீர் நிறுத்தம்
வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் நீர் நிறுத்தம்
வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் நீர் நிறுத்தம்
ADDED : ஜன 27, 2024 02:05 AM
ஆண்டிபட்டி,:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1912 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 27 கி.மீ., தூரத்துக்கு 58ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இந்த ஆண்டு நீர் இருப்பு போதுமான அளவு இருந்ததால் டிசம்பர் 23 ல் 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 100 கனஅடி வீதம் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 8:30 மணிக்கு நிறுத்தப்பட்டது.
நேற்று அணை நீர்மட்டம் 70.37 அடியாக இருந்தது(அணை மொத்த உயரம் 71 அடி).
விவசாயிகள் கூறியதாவது: ஒரு மாதத்திற்கும் மேலாக 58ம் கால்வாயில் சென்ற நீரால் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, நிலக்கோட்டை தாலுகாக்களில் 35 கண்மாய்களில் நீர் தேங்கியது. 2085 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளது.
58ம் கால்வாயில் சென்ற நீரால் வழியிலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையும் பூர்த்தியடைந்துள்ளது என்றார்.

