/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை குடிநீர் திட்ட குழாயில் வீணாக வெளியேறிய குடிநீர்; - கூடலுார் புறவழிச்சாலையில் குளம் போல் தேங்கியது

ADDED : ஏப் 27, 2025 07:03 AM

கூடலுார் : கூடலுார் புறவழிச் சாலையில் மதுரை குடிநீர் திட்ட குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி குளம் போல் தேங்கியது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரைக்கு ரூ.1500 கோடி மதிப்பீட்டில் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதற்காக குறுவனத்துப் பாலம் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்குள்ள ராட்சத நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை தேக்கி, அங்கிருந்து பம்பிங் செய்யப்பட்டு கூடலுார், கம்பம், தேனி வழியாக குழாய் மூலம் குடிநீர் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
குழாய் செல்லும் பகுதியில் பல இடங்களில் ஏர்வால்வு குழாய் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது
கூடலூர் வாட்டர் டேங்க் மேல் பகுதியில் உள்ள புறவழிச் சாலையை ஒட்டி மதுரை குடிநீர் திட்ட குழாயில் ஏர்வால்வு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அப்பகுதியில் இருந்து பல மணி நேரம் குடிநீர் வீணாக வெளியேறி குளம் போல் தேங்கியது.
ஏர்வால்வு குழாயை சுற்றிலும் மண் அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதில் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம், மதுரை குடிநீர் திட்டத்திற்கு 50 கன அடி நீர் போக 50 கன அடி மட்டுமே ஆற்றில் ஓடுகிறது. குடிநீர் பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் வீணாக வெளியேறியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபோன்ற பிரச்னை இனிமேல் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.