ADDED : செப் 21, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து வடபுதுப்பட்டி செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இந்த ரோட்டில் போலீஸ் குடியிருப்பு, அரசு அலுவலர்கள் குடியிருப்பு உள்ளன.
இந்த ரோடு வழியாக வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சில நாட்களாக இந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்க ஊராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.