/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜன.27, 28 ல் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
/
ஜன.27, 28 ல் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : ஜன 25, 2024 05:57 AM
ஆண்டிபட்டி: மாநில அளவில் ஜன., 27,28 ல் நீர் வாழ் பறவைகள் குறித்து தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்த வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
வனத்துறையினர் கூறியதாவது:
நீர் வாழ் பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நடந்தது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஒரே நாளில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. தேனி வனக்கோட்டத்தில் 25 கண்மாய்கள், மேகமலை புலிகள் காப்பகத்தில் 25 கண்மாய்கள் உள்ளன.
தேனி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் உதவி ஆராய்ச்சியாளர் சூரஜ் குமாரை 63834 89107 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு ஜன.,27ல் பறவைகள் குறித்த விபரம், பதிவு செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
ஜன.28 ல் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும். பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு வனத்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.