/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடையில் குடிநீர் பிடிக்கும் அவலம் வைகை ஆற்றங்கரையில் அவதி
/
சாக்கடையில் குடிநீர் பிடிக்கும் அவலம் வைகை ஆற்றங்கரையில் அவதி
சாக்கடையில் குடிநீர் பிடிக்கும் அவலம் வைகை ஆற்றங்கரையில் அவதி
சாக்கடையில் குடிநீர் பிடிக்கும் அவலம் வைகை ஆற்றங்கரையில் அவதி
ADDED : ஏப் 03, 2025 04:58 AM

தேனி: தேனி அருகே அமச்சியாபுரத்தில் குறைந்த அளவு குடிநீரை சாக்கடையில் குடத்தை வைத்து பிடிக்கும் அவலநிலை உள்ளது.ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டு அமச்சியாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த கிராமம் மூல வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தெரு காலனியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் பல்வேறு குறுக்குத்தெருக்கள் உள்ளன. ஓராண்டிற்கு முன் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த குழாய்களில் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. ஒரு குறுக்குத்தெருவில் உள்ள 4 வீடுகள் முன் பதிக்கப்பட்ட குழாய்களில் குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பானையை தாழ்வாக வைத்தால்தான் குடிநீர் விழும். எனவே, குழாயில் பிளாஸ்டிக் பைப் இணைத்து அருகில் உள்ள சாக்கடையில் வைத்து குடிநீரை மக்கள் பிடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் சாக்கடையில் பானை, குடம் வைத்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். வீட்டிற்கு ஒன்று, இரண்டு குடம் நீர்மட்டும் கிடைக்கிறது.
சுகந்தி, அமச்சியாபுரம்.வீடுகளுக்கு அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் காட்சிப்பொருளாக உள்ளன. குடிநீர் இல்லாததால் அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகள், தோட்டங்களில் பயன்படுத்தும் நீரை குடிக்கும் நிலை உள்ளது. சில குழாய்களில் வரும் நீரையும் சாக்கடையில் குடம் வைத்து பிடிக்கிறோம்.
அழுத்தம் இன்றி குறைந்தளவு நீர் வருவதால் இந்த அவல நிலை தொடர்கிறது.எனவே வீடுகள் முன் அமைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

