/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
/
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ADDED : ஜன 04, 2024 06:37 AM

போடி: போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா போடி நாயுடு நாயக்கர் மத்திய சங்கத் தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்டத் தலைவர் பாலகுரு, போடி நாயுடு நாயக்கர் மத்திய சங்க துணைத் தலைவர்கள் பொன் கலைச்செல்வன், பாண்டி, செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தனர். தேவராட்டமும், பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும் பெரியாண்டவர் கோயிலில் துவங்கி காமராஜ் பஜார் வழியாக கட்டபொம்மன் சிலை வரை சென்றனர். விழாவில் முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
* அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி., பார்த்திபன், அமைப்பு சாரா அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சி மணி, தி.மு.க., சார்பில் நகர செயலாளர் புருசோத்தமன், பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் பாண்டியன், அ.ம.மு.க, சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, நகரச் செயலாளர் ஞானவேல், ஓ.பி.எஸ்., அணி சார்பில் மாவட்டச் செயலாளர் சையதுகான், நகரச் செயலாளர் பழனிராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். போடி நாயுடு நாயக்கர் மத்திய சங்க நிர்வாகிகள், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.