ADDED : ஆக 14, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
15–ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட இயக்குநர்களாக ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை நியமித்தது, காலியாக உள்ள 41 உதவி இயக்குநர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிந்தனர். ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் இச்சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்தனர்.
