/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெசவாளர்கள் ஊதியம் 7 சதவீதம்; நுாற்போர்களின் ஊதியம் 25 சதவீதம் அதிகரிப்பு: கதர் இயக்குனர்

ADDED : செப் 23, 2024 02:39 AM
தேனி: ''நெசவாளர்களின் ஊதியம் 7 சதவீதமும், நுாற்போர்களின் ஊதியம் 25 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என, தேனி மாவட்ட ஆய்வில் பங்கேற்ற கதர் கிராம தொழில் வாரிய மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சமீபத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள், மத்திய அரசின் 3.0 ன் 100 நாட்கள் நிறைவு விழா குஜாராத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய அரசின் குறு, சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் காதி கைவினைஞர்களுக்கு பெரிய பரிசை அறிவித்துள்ளார்.
அதில் நுாற்போர்களின் ஊதியத்தில் 25 சதவீதமும், நெசவாளர்களின் ஊதியத்தில் 7 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2024 அக்., 2 முதல் இந்த ஊதியம் வழங்கப்பட்டு அமலுக்கு வரும்.
2023 ஏப்.,1ல் இருந்து ஒரு சிட்டத்திற்கு (பண்டல் உற்பத்திக்கு) ரூ.7.50 ஆக இருந்த ஊதியம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது அக்.,2 முதல் ரூ.10 முதல் ரூ.12.50 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். கடந்த நிதியாண்டில் காதி வர்த்தகம் ரூ.1.55 லட்சம் கோடியை தாண்டியது.
நாடு முழுவதும் 3 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட காதி நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 4.98 லட்சம் கைவினைஞர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் 80 சதவீதம் பெண்கள். உயர்த்தப்பட்ட ஊதியம் அப்பெண்களின் வாழ்வில் புதிய பொருளாதார வலிமையை கொடுக்கும்.
காதி மூலம் கிராமப்புற இந்தியா வலிமை பெறும் என்றார். ஆய்வில் மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.