ADDED : பிப் 21, 2026 06:11 AM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: வைகை அணை நீர்வளத்துறை அலுவலக கண்காணிப்பாளர் சரவணக்குமரன் சங்கீதாராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுவந்தி நாச்சியாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருணாச்சலம் விஜயராணி தம்பதியின் மகன் மணிவண்ணனுக்கும் வைகை அணை பாலர் இல்லத்தில் திருமணம் நடந்தது.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆவின் முன்னாள் தலைவர் ராஜா முன்னிலை வகித்து மணமக்களுக்கு ஆசி வழங்கினார்.
தேனி முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமர், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் குரு தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை சார்பில் சரவணன், டாக்டர் முத்துகுகன் உட்பட பலர் வாழ்த்தினர்.
