/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிசிடிவி கேமரா பழுது பார்த்தல் இலவச பயிற்சிக்கு வரவேற்பு
/
சிசிடிவி கேமரா பழுது பார்த்தல் இலவச பயிற்சிக்கு வரவேற்பு
சிசிடிவி கேமரா பழுது பார்த்தல் இலவச பயிற்சிக்கு வரவேற்பு
சிசிடிவி கேமரா பழுது பார்த்தல் இலவச பயிற்சிக்கு வரவேற்பு
ADDED : பிப் 14, 2025 12:57 AM
தேனி; தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பழுது நீக்க இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.,17 ல் துவங்குகிறது.
ஊரக பகுதியை சேர்ந்த 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
பயிற்சி உபகரணங்கள், உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு தொழில் துவங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே செயல்படும் கனராவங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக அணுகலாம் அல்லது 95003 41493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.