/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீவன புல் நறுக்கும் கருவிகள் மானியத்தில் பெற வரவேற்பு
/
தீவன புல் நறுக்கும் கருவிகள் மானியத்தில் பெற வரவேற்பு
தீவன புல் நறுக்கும் கருவிகள் மானியத்தில் பெற வரவேற்பு
தீவன புல் நறுக்கும் கருவிகள் மானியத்தில் பெற வரவேற்பு
ADDED : ஜூலை 12, 2025 04:11 AM
தேனி : தேனி மாவட்ட விவசாயிகள் கால்நடை தீவன புல் நறுக்கும் கருவிகளை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்.'என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளர்.
அவர் கூறியதாவது: கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 30 புல் நறுக்கும் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கருவி பெற விரும்புவோர், கால்நடை வளர்க்கும் சிறு, குறு விவசாயிகளாக இருப்பது அவசியம். குறைந்த பட்சம் 2 மாடுகள் அல்லது 20 ஆடுகள் வைத்திருப்பது அவசியம். குறைந்த பட்சம் கால் ஏக்கர் தீவனப்புல் சாகுபடி நிலத்தோடு மின்சார வசதியை பெற்றிருக்க வேண்டும்.
புல் நறுக்கும் கருவி ஒன்றின் விலை தோராயமாக ரூ.29,000 எனில், இதில் 50 சதவீத தொகை ரூ.14,504 மானியமம் வழங்கப்படும். மீதியுள்ள 50 சதவீத பணத்தை பயனாளி வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து வழங்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பணிபுரியும் உதவி கால்நடை மருத்துவ அலுவலர்களை நேரில் கண்டு பயன் பெறலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.