/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க வரவேற்பு
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க வரவேற்பு
ADDED : ஏப் 05, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா கூறியதாவது: பிரதமர் நுண்ணீர்பாசனதிட்டத்தில் தானியங்கி சொட்டுநீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்த கருவியை அலைபேசி மூலம் இயக்கலாம். பயன்பெற விரும்பும் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தை தேர்வு செய்து இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த மானியம் புதிதாக தானியங்கி கருவியுடன் சொட்டுநீர் பாசனம் அமைப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும். மானியமாக ரூ.18ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை பெறலாம்.

